ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். எந்த ஒரு காரியத்தையும் சரியான நேரத்தில் முடித்து பலரது பாராட்டை பெறுவீர்கள். குடும்ப வருமானம் ஓரளவு சொல்லும்படி இருக்கும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். எதிர்ப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். குடும்ப நபர்களின் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். பூர்வீக சொத்து வகையில் வில்லங்கம் இருக்கும். பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதின் மூலம் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com